தமிழகம் முழுவதும் நாளை முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாளை பொங்கல் திருவிழா, 15ஆம் தேதி மாட்டு பொங்கல் மற்றும் 16ஆம் தேதி காணும் பொங்கல் என மூன்று நாட்கள் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களது ஊருக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். அதற்காக 13ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2500 பேருந்துகளுடன் 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 17ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 18ம்தேதி தைப்பூசம் அரசு விடுமுறை என மொத்தம் 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.