Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் மேற்படிப்பிற்காக கல்வி உதவி தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. NCERT நடத்தும் இந்த தேர்வானது இரண்டு நிலைகளை உள்ளடக்கியது. அதாவது முதல் கட்ட தேர்வு மாநில அளவிலும் அதில் தேர்ச்சி பெறுபவர்கள், இரண்டாவது கட்டமாக தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 11 மற்றும்12 ஆம் வகுப்பு படிக்கும்போது மாதந்தோறும் ரூ.1,250 மற்றும் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும்போது மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகையாக வழங்கப்படும். 2021-2022 ஆம் ஆண்டு கல்விக்கான தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஜனவரி 29ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டுகளை பள்ளியின் தலைமையாசிரியர்கள் என்ற இணையதளத்தின் மூலம் ஜனவரி 19ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி இந்த தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |