Categories
சினிமா

“அப்படியெல்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ்….!!” BB 5 லிருந்து வெளியேறிய கையுடன் உருக்கமாக பேசிய பிக் பாஸ் பிரபலம்…..!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் தாமரை செல்வி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவராவார். 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த தாமரை செல்வி, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பைனல்ஸ் லிஸ்டில் கண்டிப்பாக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டது பெரும்பாலான ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை செல்வி லைவ் வீடியோவில் பேசியுள்ளார்.

 

அதில் தான் இறுதி வரை செல்லாமல் வெளியேறியதை நினைத்து கவலைப்பட வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் என்றும் நான் உங்கள் வீட்டு பிள்ளை என்று கூறியுள்ள தாமரை செல்வி, நான் இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததே பெரிய விஷயம் என்றும் தெரிவித்துள்ளார். தான் வெளியேறியதை நினைத்து யாரும் சாப்பிடாமல் இருக்கக்கூடாது என்றும் ரசிகர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் தாமரை செல்வி.

Categories

Tech |