தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது
இந்நிலையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 93 லட்சம் பேர் 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். அதனைத் தொடர்ந்து தற்போது பூஸ்டர் தடுப்பூசி 60 வயது மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது. 2 வது அலையை விட மூன்று மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப் படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.