தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சளி, இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய மேற்கொள்ள என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ஒமிக்ரான் பாதிப்பு மூக்கு, தொண்டையில் மட்டுமே ஏற்படுவதால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.