Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு ரெடி …..!!

சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு

தேவையான பொருட்கள் :

சேப்பங்கிழங்கு-கால் கிலோ

பொpய வெங்காயம்-2

தக்காளி-2

பச்சைமிளகாய்-2

இஞ்சி பு ண்டு விழுது- 1 டீஸ்பு ன்

மிளகாய்த் தூள்-1 டேபிள் ஸ்பு ன்

தனியாத்தூள்-1 டேபிள் ஸ்பு ன்

மஞ்சள்தூள்-அரை டீஸ்பு ன்

கறிவேப்பிலை-1 கொத்து

உப்பு-தேவைக்கேற்ப

கொத்தமல்லி தழை-1 கைப்பிடி அளவு

சோம்பு-அரை டீஸ்பு ன்

எண்ணெய்-தேவைக்கேற்ப

Image result for சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு

 

செய்முறை :

சேப்பங்கிழங்கை நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.வாணலியில்; எண்ணெயை காயவைத்து நறுக்கிய கிழங்கை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். பிறகு சோம்பை போட்டு தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பு ண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி, கறிவேப்பிலையை போட்டு தொடர்ந்து எல்லாத்தூளையும் போட்டு உப்பைத் தூவி நன்கு வதக்கி விடவும்.பிறகு ஒரு கப் தண்ணீரை ஊற்றி மூடியைப் போட்டு அனலைக் குறைத்து வைத்து வேகவிடவும்.கிழங்கு நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி தழையைத் தூவி நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும். இப்போது சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு ரெடி. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம், தோசைக்கு வைத்து சாப்பிடலாம்.

இப்பொது சுவையான சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு ரெடி .

Categories

Tech |