Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரூ.4000…. சற்றுமுன் அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருக்கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதாவது திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். திருக்கோவில்களில் பணியாற்றும் முழுநேர, பகுதிநேர உள்ளிட்ட அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.

இதற்கு முன்பாக திருக்கோவில் பணியாளர்களுக்கான பொங்கல் கருணைக்கொடை 1,000 ரூபாயில் இருந்து தற்போது 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களின் ஓய்வூதியம் ரூபாய் 4,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |