கரூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவை சேர்ந்த எச்.ராஜா திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அதாவது பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு வழங்கப்படாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ? தமிழகத்திற்கும் மோடி பிரதமர் தானே ? என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் இன்றைக்கு மட்டும் தேர்தல் வைத்தால் திமுக கண்டிப்பாக தோற்கும் என்று கூறி அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளார். மேலும் தற்போது மாநில அரசின் பட்டியலில் உள்ள சட்ட ஒழுங்கு பிரிவை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றி விவாதம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார்.
எச்.ராஜாவின் இந்த கூற்றானது மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதாவது மத்திய அரசின் வசம் மாநில காவல்துறை முழுவதுமாக செல்ல வேண்டும் என்பதே இதன் உள்ளர்த்தம் என்று கருதுகிறார்கள்.