தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் வர்ஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரையாண்டு தேர்வில் வர்ஷா மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அவரை அவரது தாய் ரமணி ஏன் சரியாக படிக்கவில்லை என கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த வர்ஷா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.