ஐ.பி.எல். ஏலத்தில் கொல்கத்தா அணி தமிழக வீரரும், சுழல்பந்து வீச்சாளருமான வருண் சக்ரவர்த்தியை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், தமிழக வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான வருண் சக்ரவர்த்திக்கு தொடக்க விலையாக 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவரை, 4 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்து கொண்டது. 2018-ல் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் 8.40 கோடிக்கு வருண் சக்ரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.