தனுஷின் 40வது படத்திற்கு தலைப்பு முடிவாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் 40வது படம் எடுக்கப்பட்டு வருகிறது.இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்து வருகிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துமுடிந்து தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது .படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் சுருளி ,அதனால் இந்த பெயரே படத்தின் தலைப்பு என வதந்திகள் பரவின.ஆனால் இப்படத்தை இயக்கும் நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் அந்த தலைப்பை மறுத்துள்ளது .
இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தனுஷ்- கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை .பட பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெறுகிறது .2020 ஜனவரி 15ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது .அதன் பின் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கும் .வரும் பிப்ரவரியில் இப்படத்திற்கான பெயர் அறிவிக்கப்படும் .அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்கவேண்டும் என கூறப்படுள்ளது .