Categories
மாநில செய்திகள்

கண்டிப்பா வந்துருங்க… பேரணியில் பங்கேற்க கமலை நேரில் அழைத்த திமுக..!!

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி  ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மசோதாவுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது நாட்டின் போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. டெல்லி கர்நாடகா, பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திமுக சார்பில் 23-ஆம் தேதி மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவித்தது. இந்த நிலையில் திமுகவின் பேரணியில் மக்கள் நீதி மய்யம்  பங்கேற்க வேண்டும் என கமலுக்கு திமுக நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் நீதிக்கு மய்யம் அலுவலக்திற்கு சென்று  திமுகவின் அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி, தலைமை நிலை செயலர் பூச்சி முருகன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். முன்னதாக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |