Categories
தேசிய செய்திகள்

மனைவிகளை மாற்றி உல்லாசம்….!! ஆயிரக்கணக்கான தம்பதிகள்…. போலீசில் சிக்கியது எப்படி….??

கேரளாவில் சமூக வலைதளங்களில் குழுக்களை தொடங்கி மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்து வந்த தம்பதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் மற்ற ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயபடுத்துவதாக கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து ஆலப்புழை, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முகநூல், டெலிகிராம் ஆகிய சமூக வலைத்தளம் மூலமாக ஒரு குழுவை ரகசியமாக தொடங்கி அந்த குழுவுக்கு ‘கப்பிள்ஸ் மீட்’ என்று பெயரிட்டுள்ளது தெரியவந்தது.

இந்த குழுவில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கணவர், மனைவி இருவரும் தங்களது விருப்பத்துடனும் மற்றும் கட்டாயத்தின் பேரிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடுவார்கள். சிலநேரம் குழுவில் உள்ள உறுப்பினர்களின் வீடுகளிலும், உல்லாச விடுதிகளிலும் சந்தித்து மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிப்பது வருவதாக தெரியவந்துள்ளது.சில நேரங்களில் ஒரு பெண் பல ஆண்களின் ஆசைக்கும், ஒரு ஆண் பல பெண்களின் ஆசைக்கும் இணங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Categories

Tech |