இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 25,000 தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் மாநில அரசு இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியது, டெல்லியில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் குறைய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பாதிப்பு குறைந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்படும். அதனைத் தொடர்ந்து மும்பையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைக்கு வருவதில்லை. டெல்லியில் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.