பராகுவே நாட்டின் காட்டுப் பகுதியில் அதிவேகத்தில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.
பராகுவே நாட்டின் தலைநகரமான, Asuncion-ன் தெற்கு பகுதியில் இருக்கும் Villeta என்ற காட்டுப்பகுதியில் பயங்கரமாக தீ பரவி வருகிறது. சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி, தீயில் கருகி விட்டது.
எனவே, தீயணைப்புபடை வீரர்கள், தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக, 40 தீயணைப்பு படை வீரர்கள், 8 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். தீ பரவக்கூடிய 221 இடங்களை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.