Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! ஜனவரி 31 வரை விடுமுறை. …மாநில அரசு உத்தரவு….!!

இந்தியாவை கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று ஆட்டிப்படைத்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் 186 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 535 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு 55,878 ஆகும். இதில் 55,061 பேர் குணமடைந்துள்ளனர் . இதுவரை 14.98 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த முதல்வர் பீமா கண்டு தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விரிவான உத்தரவில், இரவுநேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். அதேசமயம் வேலை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் 50 சதவீத மாணவர்களுடன் செயல்படலாம்.

அனைத்து அலுவலகங்கள், உணவகங்கள், பார்கள், உடற்பயிற்சி கூடங்கள்,பொது போக்குவரத்து, நீச்சல் குளங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றில் 50 சதவீத பேர் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும். வர்த்தக நிறுவன ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் முழுவதுமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வர்த்தக செயல்பாடுகள் இரவு 8 மணி வரை மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |