Categories
உலக செய்திகள்

இந்த ஆண்டில் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவோம்….. பிரபல நாடு வெளியிட்ட தகவல்…!!!

இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இந்த வருடத்தில் பல விஷயங்களில் சேர்ந்து செயல்படவிருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான ஜென் சாகி, வாஷிங்டனில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, “கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் அமெரிக்காவில் சந்தித்தனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர்.

இந்த வருடத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றும். பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது, கொரோனாவை எதிர்த்து போராடுவது, நாற்கர கூட்டமைப்பு மூலமாக நடவடிக்கைகள், இணையவழி குற்றங்களை தடுப்பது, வர்த்தக முதலீட்டு நல்லுறவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை உபயோகித்தல் போன்ற பல விஷயங்களில் இரண்டு நாடுகளும் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிலும் அது தொடரும். இந்தியாவின் எல்லையை, சீனா அத்துமீறி ஆக்கிரமித்து வருவதை அமெரிக்கா கூர்மையாக கவனித்து வருகிறது. எல்லை பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும். பக்கத்து நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் சீன நாட்டின் நடவடிக்கைகள் வருத்தமளிக்கும் வகையில், இருக்கிறது. இந்த பிரச்சனையில் நட்பு நாடுகளுக்கு, அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |