Categories
அரசியல்

“நாங்க எல்லாம் வேற லெவல்”….. குறைத்து மதிப்பிடாதீர்கள்….!! அடித்துச் சொல்கிறார் மாயாவதி…..!!

சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என மாயாவதி கூறியுள்ளார்.

“உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவும், சமாஜ்வாடியும்தான் இருக்கிறார்கள். என்று யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம். பகுஜன் சமாஜ் கட்சியை யாரும் தப்பாக கணக்குப் போட்டு விடாதீர்கள். நாங்கள் வேறு மாதிரியாக போட்டியைக் கொடுப்போம்.” என்று மாயாவதி கூறியுள்ளார்.உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையில்தான் நேரடி மோதல் உள்ளது போன்ற பாவனை உள்ளது. ஆனால் இடையில் காங்கிரஸும் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட்டு விட முடியுமா என்று தெரியவில்லை. ராகுல் காந்தியுடன் ஒப்பிடுகையில் பிரியங்கா காந்தி சற்று பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் அவர் சூறாவளி போல செயல்பட்டு வருகிறார். மேற்கு உத்தரப் பிரதேசத்தில்தான் அவர் முழுக்க கவனம் செலுத்தியுள்ளார். பெண்களின் வாக்குகளை அவர் பிரதானமாக வைத்து உரையாற்றி வருகிறார். தேர்தலிலும் கூட 40 சதவீதம் பெண்களுக்கு டிக்கெட் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
எனவே காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட இந்த முறை சிறப்பாக செயல்படும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கு மத்தியில் “தேர்தல் போட்டியில் பகுஜன் சமாஜ் கட்சி இல்லை என்று யாரும் தப்புக் கணக்கு போட்டு விட வேண்டாம். நாங்கள் வேற மாதிரியான பிரச்சார பாணியைக் கொண்டவர்கள். இது இரண்டு கட்சிகள் மட்டுமே சம்பந்தப்பட்ட தேர்தல் கிடையாது. நாங்கள் இல்லாமல் எந்தத் தேர்தலையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.” என்று கூறுகிறார் மாயாவதி.பகுஜன் சமாஜ் கட்சியைப் பொறுத்தவரை பிரசாரத்தில் அது தீவிரமாக இல்லாவிட்டாலும் கூட அதன் வாக்கு சிறப்பாகவே உள்ளது. மாநில மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தைக் கொண்ட தலித்துகளின் வாக்குகள் பெரும்பாலும் பகுஜன் சமாஜ் கட்சிக்கே கிடைக்கும். உத்தரப் பிரதேச சட்டசபையில் 86 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தினருக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |