Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது, அடிப்படை சம்பளம் உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் அவர்களின் சம்பளம் 23% உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு கடந்த வருடம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.அந்த வகையில் ஆந்திராவிலும் அரசு ஊழியர்களுக்கு 5.24 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அடிப்படை ஊதியம் 23% உயர்த்தப்பட்டு 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ல் இருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். ஜெகன் அண்ணா ஸ்மார்ட் டவுன்ஷிப்ஸ் – லே அவுட்களில் 10% மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் வீடற்ற அரசு ஊழியர்களுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படும் என்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |