மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான தண்டனையாக கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை திருவொற்றியூரில் மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாதுகாக்காத போது அந்தப் பெண் பாதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள்,மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான குற்றமாக கருதப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட 80 வயது மாமியாருக்கு 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து நீதிபதிகள் உடனடியாக காவல் நிலையத்தில் அவர் சரணடைய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.