இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதில் தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படுவதாக இரண்டு வருடங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்திற்கு, ‘800’ என்று பெயரிடப்பட்டு அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று கூறினார். ஆனால், இத்திரைப்படம் தொடங்குவதற்கு முன், பல விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியது. எனவே, அந்த படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டார்.
தற்போது, தேவ் படேல், விஜய் சேதுபதிக்கு பதில் இத்திரைப்படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டிருக்கிறது.