தமிழகம் முழுவதும் கடந்த 9 தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளயில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு ஜனவரி 11-ஆம் தேதி அதாவது இன்று ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி தேர்வு இன்று நடைபெறகிறது. மேலும் தேர்வுக்காக ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நுழைவுச் சீட்டை பயன்படுத்தி தேர்வு எழுதலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 73 மையங்கள் அமைக்கப்பட்டு புள்ளியல் சார்நிலைப்பணி நேர்காணல் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்து கொண்டிருந்த தேர்வை ஆணையத் தலைவர் கா.பாலசந்திரன் ஆய்வு செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி வரக்கூடிய காலங்களில் தேர்வுகள் தமிழ் வழியில் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் கொள்குறிவகை தமிழில் இருக்கும். ஆனால் மற்ற குரூப் 1, 2, 2A ஆகிய தேர்வுகளில் விரிந்துரைக்கும் வகையிலான வினாத்தாள் இருக்கும். இதில் 40 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றால் மட்டுமே மற்ற மதிப்பீட்டு தாள்கள் திருத்தப்படும். அதனைப் போலவே குரூப்-4 தேர்வில் 40 க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். தமிழில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களை தகுதி மதிப்பெண்களாக மட்டுமில்லாமல் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்கள் அதையும் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பை தேர்வாணையம் செய்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.