Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்…. வெளியான அறிவிப்பு….!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து சந்தேகம் எழுந்தது. இதற்கு அரசு ஜல்லிக்கட்டின் போது பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை, மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் முன்பதிவு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு நேரடியாக டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நபர்கள் என்ற www.madhurai.nic.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |