மத்திய பிரதேசம் மாநிலத்தில் இரண்டரை லட்சம் கோடி கடன் சுமையை சுமந்து தத்தளித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு ரூ.2000 கோடி செலவில் ஆதிசங்கரருக்கு 108 அடி சிலை நிறுவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தச் சிலை 54 அடி உயரமான தளத்தில் அமைக்கப்படும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுவினருடன் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த பிறகே இந்த பிரச்சினை பற்றி கருத்து கூற முடியும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் திட்டம் நிறைவேற்றுவதற்கான நிதிச்சூழல் இல்லாத நிலை என்று சந்தேகம் எழுப்பியுள்ளது.