Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை பாஜக சொல்லல!…. “இங்க இருக்குற மாணவர்கள் தான் சொல்றாங்க”…. காயத்ரி ரகுராமின் புது உருட்டு….!!!!

சென்னை சென்ட்ரல் கிழக்கு பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், “காலம் காலமாக காங்கிரஸ் கட்சி ரீல் விட்டு கொண்டிருக்கிறது. பஞ்சாபில் என்ன நடந்தது ? என்பது அனைவருக்குமே தெரியும்” என்று பேசினார். அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சாபில் பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், பாஜக நீட் தேர்வை வரவேற்க வேண்டிய விஷயம் என்று சொல்லவில்லை. இங்கு உள்ள மாணவர்கள் தான் அப்படி சொல்கிறார்கள். நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு நிறைய விஷயங்கள் கிடைத்துள்ளது. எப்போதுமே பாஜக மக்களின் குரலாக தான் இருக்கும். மாணவர்களுக்கான தேவை எதுவோ அதை தான் பாஜக நிறைவேற்றியுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரம் கிடைக்கும் போது தான் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பேச தமிழக எம்பிக்களுக்கு அனுமதி வழங்குவார் என்று கூறினார். மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ. 5,000 கொடுக்காதது மனதிற்கு வேதனை அளிப்பதாக கூறிய காயத்ரி ரகுராம் கொரோனா விஷயத்தில் நிறைய தவறு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் மக்கள் மழை விவகாரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மழை வரப்போகிறது என்பது பற்றிய அறிவிப்பை கூட கொடுக்கவில்லை என்று கூறினார். பின்னர் காயத்ரி ரகுராமிடம் மழை அறிவிப்பு எல்லாம் வானிலை ஆய்வு மையம் தானே கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு காயத்ரி ரகுராம் உருட்டு எப்படி வேண்டுமானாலும் உருட்டலாம் என்று கூறி புது உருட்டாக உருட்டியுள்ளார்.

Categories

Tech |