தமிழ் சினிமாவில் கோடிகள் வரை சம்பாதிக்கும் நடிகைகளும் பிற்கால சேமிப்பிற்காக சில தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சைடு பிசினஸில் கல்லா கட்டும் 6 நடிகைகள் பற்றி பார்ப்போம்.
1. நயன்தாரா :-
தமிழ் சினிமாவில் மாஸாக வலம் வரும் நடிகை நயன்தாரா கைவசம் பல்வேறு தொழில்கள் வைத்துள்ளார். அந்த வகையில் நயன்தாராவின் காதலர் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் ‘சாய் வாலா’ என்ற டீ கம்பெனியில் நயன்தாரா பார்ட்னராக உள்ளார். அதேபோல் ‘தி லிப் பாம்’ என்கிற அழகு சாதன கம்பெனியையும் நயன்தாரா அண்மையில் தொடங்கியுள்ளார்.
2. பூர்ணிமா பாக்யராஜ் :-
பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது, பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்வது போன்ற வேலைகளில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பல்வேறு டிசைன் மாஸ்க்குகளை தயார் செய்து வருகிறார்.
3. சமந்தா :-
தமிழ் சினிமாவில் கெத்து காட்டும் நடிகை சமந்தா ஆன்லைன் மூலம் ஆடைகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் தன்னுடைய ஃபேஷன் லேபிள் ஃபேஷனை மலிவாகவும், அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
4. தமன்னா :-
நடிகை தமன்னா நகைகளை வடிவமைத்து அவற்றை ஆன்லைன் மூலம் விற்று வருகிறார்.
5. ஹன்சிகா :-
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
6. திரிஷா :-
நடிகை திரிஷா ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்தி வருகிறார். இதன் மூலம் திரிஷா பல இடங்களில் நிலம் வாங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.