Categories
மாநில செய்திகள்

புகார் வந்த 30 நிமிடத்திற்குள்…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்கும் வகையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு பிறப்பித்துள்ள புதிய வித் உத்தரவுகள் பின்வருமாறு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2021-ன் கீழ் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு சுய நினைவில் உள்ளவர்களை புலன் விசாரணை செய்யும் முறையினை எளிதாக்குவதற்கு தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, பாலியல் குற்றங்களில் காவல் துறையின் உதவி தேவைப்படும் பட்சத்தில் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து ஒரு பெண் காவல்துறை அதிகாரி உடனடியாக செல்ல வேண்டும்.

புகார் பெற்றவுடன் விசாரணை அதிகாரி உடனடியாக 30 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு அல்லது பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவரை மீட்டு அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி இருந்தால் தேவைப்பட்டால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கான வழிமுறைகளை தாமதிக்காமல் செய்திடல் வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |