தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அந்த வரிசையில், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு கமிஷனராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கனிம வளத்துறையின் மேலாண் இயக்குனராக சுதீப் ஜெயின் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் எல்காட் நிறுவன செயல் அதிகாரியாக அருண்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.