Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் இவ்வளவு நலத்திட்டங்கள் இருக்கா?….. வட்டியும் அதிகம்….. கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமான திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கிறது.

ஒவ்வொரு திட்டங்களுக்கும் தனித்தனி விதிமுறைகள் மற்றும் கால அளவும் உள்ளது. அதனைத் தொடர்ந்து தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் 9 சிறு சேமிப்புத் திட்டங்கள் மிக முக்கியமானது பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் சேமிப்புத் திட்டங்களில் ஆனால் அவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பாக அவற்றின் வாட்டி லாபம் எவ்வளவு என்று பார்த்து முதலீடு செய்யலாம்.

தபால் நிலைய சேமிப்பு கணக்கு

வட்டி – 4 சதவீதம்

டைம் டெபாசிட் (1 முதல் 5 வருடம்)

வட்டி – 5.5% முதல் 6.7%

ரெக்கரிங் டெபாசிட்

வட்டி – 5.8 சதவீதம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

வட்டி – 7.4 சதவீதம்

மாத வருமான திட்டம்

வட்டி – 6.6 சதவீதம்

தேசிய சேமிப்பு சான்றிதழ்

வட்டி – 6.8 சதவீதம்

பிபிஎஃப்

வட்டி – 7.1 சதவீதம்

கிசான் விகாஸ் பத்ரா

வட்டி – 6.9 சதவீதம்

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

வட்டி – 7.6 சதவீதம்

இதில் செல்வமகள் திட்டத்தில் தான் அதிக வட்டி லாபம் கிடைக்கிறது. மேலும் மூத்த குடிமக்கள் திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கும். எனவே உடனடியாக அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று உங்களுக்கு தகுந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

Categories

Tech |