Categories
சினிமா

“300 கோடி ரூபாய் தாரோம் படத்தை தாங்க”….  ஓடிடிக்கு நோ சொன்ன போனிகபூர்….!! காரணம் இதுவாம்….!!

வலிமை படத்தை 300 கோடி ரூபாய்க்கு கேட்ட ஓடிடி நிறுவனத்திற்கு போனிகபூர் மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

H. வினோத் இயக்கத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படம் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவிட்டதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், வலிமை ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர்.

இந்நிலையில் வலிமையை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அதில் ஒரு நிறுவனம் ரூ. 300 கோடி ரூபாய்க்கு வலிமை படத்தை வாங்க முயற்சி செய்துள்ளது ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர் தர மறுத்துவிட்டாராம்.வலிமையை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று போனி கபூரிடன் அஜித் கோரிக்கை விடுத்துள்ளாராம்.
வலிமையை ஓடிடியில் வெளியிட்டால் என் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள். அதனால் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யணும் என்றாராம் அஜித். இதனை மனதில் வைத்தே போனிகபூர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |