நேபாளத்தில் இம்மாதம் முழுவதும் பள்ளிகளை அடைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. எனவே, பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் நேபாளத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே, அங்கு ஹோட்டல்கள், திரையரங்குகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஸ்டேடியங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விதி, வரும் 17ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று கொரோனா பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா அதிகமாக பரவி வருவதால் இம்மாதம் முழுவதும் பள்ளிகளை அடைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் கல்வி அமைச்சகம் கூறியிருக்கிறது.