ஆளும் கட்சியில் இருக்கும் ஒரு அமைச்சர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் கருத்துக் கணிப்பில் காங்கிரஸிற்கு தான் மூன்றாம் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, மம்தா பானர்ஜி சுற்றுப்பயணம் சென்று கோவாவில் தன் கட்சியை நிலை நிறுத்த தீவிரமாக போராடி வருகிறார். இவரின் வருகையால் காங்கிரஸின் முன்னாள் முதலமைச்சர் லுய்ஸின்ஹோ பலெய்ரோ, போன்ற முக்கிய தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்தது, காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
எனினும், மூன்று மாதங்களில் கிஷோர் பர்வார், மம்லேடர் மற்றும் ராம் மந்த்ரேகர் உட்பட சில தலைவர்கள் மம்தா மீது குற்றச்சாட்டை முன்வைத்து, அவரின் கட்சியிலிருந்து விலகியது, முக்கிய திருப்புமுனையாக இருந்தது. இத்தனை சிக்கலுக்கிடையில், காங்கிரஸ் தங்கள் பலத்தை காண்பிக்க வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், கோவா மாநிலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மற்றும் பா.ஜ.க தலைவராக இருக்கும் மைக்கேல் லோபோ திடீரென்று, காங்கிரஸ் கட்சியில் சேர்வதாக கூறியிருக்கிறார். எனவே, பா.ஜ.க, பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர் காங்கிரஸ் கட்சியில் இணைவதால், அக்கட்சி புது எழுச்சியை அடையும் என்று கருதப்படுகிறது.