நடிகர் அஸ்வின் ஆணவ பேச்சால் அவருக்கு அடுத்தடுத்து வெறுப்புகள் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அஸ்வின். இந்நிகழ்ச்சியை முடித்து வந்த அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் அஸ்வின் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ள “என்ன சொல்ல போகிறாய்” என்ற திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்தது. அதற்கான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
ஆனால் அப்போது அஷ்வின் பேசியபோது, “இயக்குனர் கதை சொல்லும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்றும் இதுவரை 40 கதைகளைக் கேட்டு தூங்கி இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதனை அறிந்த சினிமா வட்டாரங்கள் இன்னும் ஒரு படம்கூட வெளியாகவில்லை அதற்குள் இப்படி ஒரு ஆணவ பேச்சா என்று பேசிவருகின்றனர்.
இதை தவிர அஸ்வின் கதை சொல்லவரும் இயக்குனர்களை காக்க வைப்பது, கதை சொல்ல வரும் போது தற்போது மூடில்லை என்று கூறுவது என அவர் பற்றி பரவிய தகவலால் அவர் மீது வெறுப்புகளும் உருவாகியுள்ளது.
இந்த சூழலில் என்ன சொல்ல போகிறாய் படத்தை வெளியிட்டால் அது வெற்றி பெறாது என்று முடிவெடுத்த படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை பொங்கலுக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில் திரையரங்கில் அதிகாலை காட்சியில் என்ன சொல்ல போகிறாய் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடு செய்யதுள்ளது.