Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயற்சி…. விற்பனையாளருக்கு ஏற்பட்ட விபரீதம்…. கார் டிரைவர் கைது….!!

சாலையை கடக்க முயன்ற விற்பனையாளர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் அருகே உள்ள சுருளியாறு மின்நிலையம் சாலையில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். தேனி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் இவருக்கு ராஜ செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று செல்லதுரை வழக்கம்போல டாஸ்மாக் கடைக்கு சென்று வேலையை முடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் லோயர்கேம்ப்பிற்கு வந்து இறங்கியுள்ளார்.

இதனையடுத்து அவரது நண்பர் காளிமுத்துவுடன் சேர்ந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது புதுரோடு பிரிவு அருகே இருவரும் சாலையை கடக்க முயன்ற போது குமுளி நோக்கி சென்றுகொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக செல்லத்துரை மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த செல்லத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து காளிமுத்து உடனடியாக லோயர்கேம்ப் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்லத்துரையின்  உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் செல்லத்துரை மீது மோதிய கார் டிரைவரான இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |