Categories
தேசிய செய்திகள்

செல்போனில் கேம் விளையாடிய மகன்….ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற தந்தை….!! பரபரப்புச் சம்பவம்…!!

செல்போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் 5 வயது மகனை தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

டெல்லி கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய பாண்டே. இவருக்கு கியான் பாண்டே என்கிற உத்கர்ஷ் என்ற 5 வயது மகன் உள்ளார். கியான்பாண்டே படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ச்சியாக மொபைலில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆதித்ய பாண்டே தனது மகனை கண்டித்தபோதும் சிறுவன் மொபைலில் விளையாடுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆதித்ய பாண்டே, தனது மகனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சிறுவன் மயக்கம் அடைந்துள்ளார்.உடனடியாக அவனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு பெற்றோர் சென்றுள்ளனர்.

சிறுவனை சோதித்த மருத்துவர்கள் அவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் காயம் குறித்து பெற்றொரிடம்   கேட்டுள்ளனர். அவர்கள் அதற்கு தெளிவான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுவனை மருத்துவர்கள் சோசித்தபோது, கை, கால், கழுத்து பகுதியில் தாக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது தெரிந்துள்ளது. இதையடுத்து, இது குறித்து போலீசுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது. புகாரின் பேரில் மருத்துவமனைக்கு சென்ற போலீசார், சிறுவனை அடித்துகொன்ற ஆதித்ய பாண்டேவை கைது செய்தனர்.

Categories

Tech |