Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற குடும்பங்கள்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்….!!

சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது பாறையின் மீது கார் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூட்டை ரோடு பகுதியில் பீட்டர் பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பீட்டர் பிரான்சிஸ் அவரின் நண்பர் ஜார்ஜ் ஆகியோர் தனித்தனி குடும்பத்துடன் 2 கார்களில் கல்வராயன்மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு அவர்கள் மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது பீட்டர் பிரான்சிஸின் மகன் ஜெய்சந்தோஷ் ஜார்ஜின் காரில் ஏறியுள்ளார்.

அப்போது அவர்கள் பெரியார் நீர்வீழ்ச்சியின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது ஜார்ஜ் ஓட்டி வந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பாறை மீது மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெய்சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |