கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா என வணிக வளாகங்களில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றதா என ஆய்வு செய்யவும், விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கவும் கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் சரவணன் துணிக்கடைகள், அரசு மருத்துவமனைகள் உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார். பின்னர் முககவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததில் 14,500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.