Categories
இந்திய சினிமா சினிமா

வாவ்…. செம சூப்பர்….. ”புஷ்பா” படத்த பார்த்துட்டு…. புகழ்ந்து தள்ளிய பிரபல தமிழ் இயக்குனர்….!!!

செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புஷ்பா’ படத்தை பாராட்டி இருக்கிறார்.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”புஷ்பா”. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார்.

இதைச் செய்தாலே மனதுக்குள் எங்கிருந்தோ உற்சாகம் வந்து விடுகின்றது'' -  இயக்குனர் செல்வராகவன் | nakkheeran

இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் தனது தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல இயக்குனரான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், புஷ்பா படத்தை பாராட்டி இருக்கிறார். அதில் ”வாவ். சூப்பர் திரைப்படம். இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக தனது பணிகளை செய்துள்ளனர். மேலும் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் நான் அடிமை ஆகி விட்டேன்” என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |