எஸ். ஜே. சூர்யா மார்க் ஆன்டனி படத்தின் கதையை 10 மணிநேரம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் எஸ். ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா வில்லனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார்.
![]()
இதனையடுத்து இவர் தற்போது இயக்குனர் ஆதிக் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் ”மார்க் ஆண்டனி” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எல்லா நல்ல கதையும் என்கிட்டே வருது. மேலும், இது மாநாடு 2”என சொல்லலாம் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவர் இந்த படத்தின் முதல் பாதி கதையை மட்டும் 10 மணி நேரம் கேட்டதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.