நடிகர் சிரஞ்சீவி மற்றும் ரெஜினா ஆடியுள்ள ‘சானா கஷ்டம் ‘என்ற பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சினிமாவில் ஒரு சில படங்களுக்கு எதிர்ப்பு கிளம்புவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் சமீபகாலமாக ஒரு சில பாடல்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ ஊ சொல்றியா’ பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது .நடிகை சமந்தா நடனமாடிய இப்பாடலில் இடம் பெற்றிருக்கும் வரிகள் ஆண்களை மிகவும் தரக்குறைவாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாக இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும் இப்பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆச்சாரியா’ திரைப்படத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ள ‘சானா கஷ்டம் ‘ என்ற பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகை ரெஜினா நடனமாடி உள்ள இப்பாடலில் இடம் பெற்றிருக்கும் வரிகள் இன்றைய இளைஞர்கள் பலர் ஆர்எம்பி மருத்துவராக விரும்புவதாகவும், இதற்குக் காரணம் அவர்களுக்கு அழகு சிகிச்சை என்ற பெயரில் பெண்களை அதுவும் குறிப்பாக சினிமா நடிகைகளின் உடலை தொட்டு பார்க்கும் பாக்கியம் கிடைக்கும் என அப்பாடலின் வரிகள் உள்ளது. இந்த வரிகள் தங்களது துறையை மோசமாக சித்தரிப்பதாக ஆர்எம்பி மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு இப்பாடலில் வரிகளை அகற்றவேண்டும் என்றும், மேலும் தங்களை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.