தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது நடைமுறை. அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது எல்லோருக்கும் அறிந்த ஒன்றே.
அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, வருகிற ஜனவரி 11-ஆம் தேதி’ கவுரவ டாக்டர் ‘ பட்டம் கொடுத்து சிறப்பு செய்யவிருக்கிறது.இது குறித்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், தலைவரும் வேந்தருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ் கூறியதாவது… ” மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு என்று ஒரு குழு இருக்கிறது”. என்று கூறியுள்ளார்.