Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. சூப்பர் சர்ப்ரைஸ்…. அடுத்த ஜாக்பாட் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து அரசு கல்வித் துறை அரசு ஊழியர்கள் என அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தினர், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% உயர்த்தி வழங்கப்படும் என்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 2021 ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் 31% அகவிலைப்படி ரொக்கமாக பெற்று வருகின்றனர். மேலும் மத்திய அரசு கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலவை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பளத்துடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு அகவிலைப்படி நிலுவை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் வழங்க வேண்டும். போனஸ் திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு ரூ.3,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

எனவே தமிழக அரசு போஸாக ரூ.7,000 அறிவிக்க வேண்டும். மேலும் ஏ மற்றும் பி பிரிவினர், கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கும் பொங்கல் போனஸ் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொங்கல் போனஸ் தொகை உயர்த்தி வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |