இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632 ஆக அதிகரித்துள்ளது. 40,823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்த 5,90,611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒமைக்ரான் பாதித்தவர்கள் 3623 ஆகவும், 1409 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதிப்பை குறைப்பது மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.