Categories
அரசியல் மாநில செய்திகள்

“முதல்வரை யாருமே மதிக்கல!”…. கொதித்து பேசிய மூத்த அமைச்சர்…. ஷாக்கான எம்எல்ஏக்கள்….!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கொரோனா, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் எழுப்பும் கேள்வியினை எவ்வாறு எதிர்கொள்வது ? என்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதற்கு முன்னதாக திமுக சட்டமன்ற கொறடா கோவி.செழியன் இந்த கூட்டத்தில் யாராவது ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா ? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அனைவரும் அமைதியாக இருந்தனர். இந்த நிலையில் மூத்த அமைச்சர் எ.வ.வேலு திடீரென எழுந்து “ரொம்ப நாளாக எனக்கு ஒரு குறை இருக்கு! அதை இன்று கொட்டி தீர்த்தே ஆக வேண்டும்” என்று கூறினார். அதனை கேட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் என்ன சொல்ல போகிறார் ? என்று திருதிருவென முழித்தனர்.

பின்னர் பேசிய மூத்த அமைச்சர் எ.வ.வேலு, ஜெயலலிதா கடந்த காலங்களில் சட்டசபைக்குள் இருந்தார் என்றால் சபையிலிருந்து எம்எல்ஏக்கள் யாரும் எழுந்து வெளியே செல்ல மாட்டார்கள். மேலும் சுகர், பிபி என எந்த பிரச்சனை இருந்தாலும் கூட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சபையை விட்டு எழுந்து போகாமல் அனைவரும் பவ்யமாக அமர்ந்திருப்பார்கள்.

ஆனால் தற்போது சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கும்போதே சபையை விட்டு திமுக எம்எல்ஏக்கள் பலரும் அடிக்கடி எழுந்து வெளியே செல்கிறார்கள். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் திமுக எம்எல்ஏக்களே இப்படி செய்வது சரியில்லை என்று கூறி கொந்தளிப்புடன் பேசினார். மேலும் “முதல்வருக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை” என்று கூறி தனது நீண்டநாள் கவலையை கொட்டி தீர்த்தார்.

Categories

Tech |