துணைப்பிரிவு அதிகாரி மற்றும் பிற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் இந்தப் பதவி அகில இந்திய சேவைப் பொறுப்பைக் கொண்டுள்ளது என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நியமனத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றக் கடமைப்பட்டவர்கள்.
காலிப்பணியிடங்கள் :
ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்: 7
துணை பிரிவு அதிகாரி: 89 பதவிகள்
ஹிந்தி தட்டச்சர்: 1 பதவி
வயது வரம்பு:
ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்: 18 முதல் 30 வயது வரை
மற்றவர்கள்: 18 முதல் 27 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள் :15.01. 2022
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளங்களில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முதன்மை இயக்குநர், டிஃபென்ஸ் எஸ்டேட்ஸ், தெற்கு கட்டளை, ECHS பாலிக்ளினிக் அருகில், கோத்வா சாலை, புனே- 411040 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
https://dagshai.cantt.gov.in/wp-content/uploads/sites/43/2021/12/1.pdf