Categories
அரசியல்

‘அந்த  7 நாள்’….  அதோட உங்க கத க்ளோஸ்…. வரவேற்புடன் பாஜகவை தெறிக்க விட்ட அகிலேஷ்….!!

அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச தேர்தலுக்கு பின் பாஜகவின் கதை முடிய போவதாக கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச தேர்தலுடன் பாஜகவின் கதை முடியப் போகிறது என்று சமாஜ்வாடிக் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 5 மாநிலசட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டமாக 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் 7 கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
கொரோனா பரவல், பாதுகாப்பு ஏற்பாடுகள், பெரிய மாநிலம் என்று பல்வேறு காரணங்கள் இருப்பதால் உ.பிக்கு 7 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடந்த 8 வாக்குப் பதிவுடன் ஒப்பிடுகையில் ஒரு கட்டம் குறைவுதான்.

உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக அரசுக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர். இந்த 7 நாள் வாக்குப் பதிவும் மக்களுக்கும், மாநிலத்திற்கும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது. மாபெரும் மாற்றம் வரப் போகிறது. சமாஜ்வாடி கட்சி ஆட்சியைப் பிடிக்கப் போகிறது.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நடத்தை விதிமுறைகளை சமாஜ்வாடிக் கட்சி முறையாக பின்பற்றும். ஆனால், ஆளுங்கட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. பாஜக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது.
வரும் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தோல்வியை தழுவும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |