ரயிலின் முன்பு ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மும்பையில் ,குர்லா ரயில் நிலையத்தில்மக்கள் அனைவரும் ரயிலுக்காக காத்திருந்தனர் .அப்போது ஒருவர் ரயில் அருகில் நெருங்கி வந்ததும், திடீரென நடைமேடையில் இருந்து குதித்து ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார்.இதைதொடர்ந்து ரயில் ஏறியதில் அவர்சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார் .
இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் பயத்தில் பதறி அடித்தபடி அங்கிருந்து ஓடினர். இத்தகவலை அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் தற்கொலை செய்துகொண்ட நபர் பீஹாரை சேர்ந்த சேதுராம் என்பது தெரிய வந்துள்ளது.