தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்வு அறிவிப்புகளை எதிர்பார்த்து பெரும்பாலானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு உதவக் கூடிய வகையில் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை கிண்டியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் கீழ் செயல்படும் மாநில தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் SSC தேர்வு பயிற்சி வகுப்புகள் இணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து குரூப்-1 குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 10 ஆம் தேதி முதல் நேரடியாகவும், இணையம் மூலமாகவும் தொடங்கவுள்ளது.
இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் forms.gle/2cqJjvv8jiLxXphe7 Vpfs என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் SSC தேர்வுக்கான பயிற்சியில் இணைய விரும்புபவர்கள் forms.gle/2EsNxbGNGXdgQxdg6 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த பயிற்சி வகுப்பின் போது மாதிரி தேர்வுகள் மற்றும் மாதிரி நேர்காணல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்று மாநில தொழில் நெறி வழிபாட்டு மையத்தின் முதன்மை அலுவலர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.