Categories
தேசிய செய்திகள்

“அடடே சூப்பர்”…. போஸ்ட் ஆபிஸில் இப்படியொரு திட்டமா…. என்னென்ன இருக்கு தெரியுமா?… டபுளா கிடைக்கும் அமெளன்ட்….!!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலையை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பான ஒரு முதலீட்டில் பொதுமக்கள் தங்களது பணத்தை சேமிக்க தொடங்கினர். இதையடுத்து குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தொகையை சேமிக்க இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. மேலும் குறைந்த தினங்களில் அதிக தொகையை சேமிக்க முடியும். அதனால் பொதுமக்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திட்டங்களில் குறைந்தபட்சமாக 1000ரூ முதல் செலுத்திக்கொள்ள முடியும்.

இதில் முதற்கட்டமாக டைம் டெபாசிட் திட்டம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் 1 முதல் 3 வருடம் வரை சேமிக்கலாம். ஒவ்வொரு வருடத்துக்கும் 5.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் 5 ஆண்டு முதலீடு செய்தால் முதிர்வு காலம் முடியும்போது 6.7% வரை வட்டித்தொகை கிடைக்கிறது. இதில் 13 வருடங்கள் முதலீடு செய்தால் முதிர்வு காலம் முடியும்போது முதலீட்டை இரட்டிப்பாக பெற முடியும். அடுத்ததாக சுகன்யா சம்ரிதி திட்டத்திலுள்ள பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயது பூர்த்தி அடைந்த பெண் குழந்தைகளின் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் கணக்கை தொடங்கி கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச முதலீடாக 250ரூ மற்றும் அதிகபட்சமாக 1,50,000ரூ வரை சேமிக்க முடியும். மேலும் ஒவ்வொரு வருடத்துக்கும் 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அத்துடன் 9.47 வருட காலம் சேமித்தால் முதலீடு தொகையை இரட்டிப்பாக பெற முடிகிறது. இத்திட்டத்தில் இருந்து பெறப்படும் தொகையை குழந்தைகளின் உயர் கல்விக்காக பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது இதில் உள்ள சேமிப்பு திட்டங்கள் தரும் பலன்களையும் வட்டி விகிதங்களையும் காணலாம்.

சேமிப்பு கணக்கு திட்டம்: 4.0% வட்டி விகிதம் – 18 வருடங்களில் முதலீடு இரட்டிப்பாகும்.

RD சேமிப்பு திட்டம்: – 5.8% வட்டி விகிதம் – 12.41 வருடங்களில் முதலீடு இரட்டிப்பாகும்.

மாதாந்திர சேமிப்பு திட்டம்: – 6.6% வட்டி விகிதம் – 10.91 வருடங்களில் முதலீடு இரட்டிப்பாகும்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்: – 7.4% வட்டி விகிதம் – 9 வருடங்களில் முதலீடு இரட்டிப்பாகும்.

ப்ரோவிடண்ட் ஃபண்ட் திட்டம்: – 7.1% வட்டி விகிதம் – 10.41 வருடங்களில் முதலீடு இரட்டிப்பாகும்.

தபால் நிலைய தேசிய சேமிப்பு சான்றிதழ்: – 6.8% வட்டி விகிதம் – 10.59 வருடங்களில் முதலீடு இரட்டிப்பாகும்.

Categories

Tech |