பொங்கலுக்கு ரிலீசாகும் திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த வலிமை படம் பின்வாங்கிய நிலையில், தற்போது ஒரு சில திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் நடித்த ”என்ன சொல்லப் போகிறாய்”, நாய் சேகர், கொம்பு வச்ச சிங்கம்டா, கார்பன் மற்றும் வீரமே வாகை சூடும் போன்ற திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது.